கடலூர் :
கடலூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் திடீர் "விசிட்' செய்தார்.
வாரம் தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்திற்கு வரும் மனுக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப் பாக பட்டா மாற்றம், இலவச மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ் போன்ற மனுக்கள் வருவது வாரம்தோறும் கூடுதலாகி வருகின்றன. அதையொட்டி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை சோதனை செய்ய கலெக்டர் சீத்தாராமன் நேற்று திடீரென கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் டி.ஆர். ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர். முதலில் தாசில்தார் அலுவலகத்தை பார்வையிட்டார். குப்பை காடாக இருப்பதாக தாசில்தாரிடம் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலகம், சர்வே பிரிவு ஆகியவற்றை சோதனை செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக