உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி போலீஸ் தாமதத்தால் 'டிராபிக் ஜாம்'


கடலூர் : 

              கடலூர் மஞ்சக்குப்பத்தில் மொபட்டில் வந்தவர்  லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
 
              விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் (45). கடந்த இரு ஆண்டாக  மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை ஆல்பேட்டையில் இருந்து மொபட்டில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.  அப்போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் மகாலிங்கம் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் தாமதம்: இச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணிக்கு நடந்தது. விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். மாலை வேளை போக்குவரத்து பிசியாக  இருந்ததால் "டிராபிக் ஜாம்' ஏற்பட் டது. வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி புதுச்சேரியில் இருந்து வந்த பஸ்களை உப்பலவாடித்தெரு, சுதர்சன நாயுடு தெரு வழியாக திருப்பிவிட்டனர். தவலறிந்த 108 வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஸ்தலத்திலேயே இறந்து விட்டதால் திரும்பியது. அரைமணி நேரத்திற்குப் பிறகு (4.55) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். கடலூரில் 50 மீட்டருக்கு ஒரு "டிராபிக் பாயின்ட்' போட்டு 2 போலீசார் பணி செய்து வருகின்றனர். போலீஸ் பாயின்டு, புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் என கூப்பிடும் தூரத்தில் இருந்தும் போலீசார் அரை மணிநேரம் தாமதமாக வந்தது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior