பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூரில் 3.6 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை இரண்டு நாளில் பஞ்சரானது. தரமில்லாத தார் சாலைகளால் அரசு பணம் வீணாகி வருகிறது.
பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் 540 மீட்டர் அளவில் தார் சாலை அமைக்கப்படாமல் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் 12வது மானிய குழு திட்டத்தின்கீழ் 3.60 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. சாலையில் குண்டு குழியுமாக உள்ள பள்ளங் கள் சீரமைக்கவில்லை. முக்கால் ஜல்லிகள் போடாமல், பெயரளவிற்கு சிப்ஸ் தார் கலவை கொண்டு போட்டதால் சாலை பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளது. சாலை பணி முடிந்த 2வது நாளில் வாகனங்கள் சென்றதில் பழைய ஜல்லி தெரியுமளவிற்கு சாலைகள் சேதமானது. தரமற்ற தார்சாலையால் ஒருமாதத்தில் தார் சாலை கந்தல் சாலையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்யாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக