கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி நியமன அரசாணை பிறப்பித்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாததால் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் காவல் துறையில் சில ஆண்டுகளுக்கு முன் சப் இன்ஸ் பெக்டர் பதவிகள் நேரடி தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டன. இது பணியில் உள்ள போலீசாரிடையே அதிருப்தியும், பல ஆண்டுகளாக பணியில் இருந்தும் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. இதனையடுத்து பணி மூப்பு அடிப்படையில் துறை வாரியான தேர்வு வைத்து அதன் மூலம் சிறப்பு சப் இன்ஸ் பெக்டர்கள் தேர்வு செய் யப்பட்டனர். தேர்வு முறையில் உயரதிகாரிகளின் குறுக்கீடுகள், சிபாரிசுகள் என பல்வேறு குளறுபடியால் மீண்டும் போலீசாரிடையே அதிருப்தி நிலவியது. இதனைத் தொடர்ந்து 2ம் நிலை காவலர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்தால் முதல் நிலை காவலர்களாகவும், அடுத்த 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்று அந்த பதவியில் "பனிஷ்மென்ட்' ஏதுமின்றி 10 ஆண்டு நிறைவு செய்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.
கடலூர் மாவட்டத்தில் 1975ம் ஆண்டு டிச.31ம் தேதி வரை சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் பதவி உயர்வு அளிக் கப்பட்டுள்ளது. ஆனால் சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 1979ம் ஆண்டு வரை தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கான அரசாணை கடந்த ஜன. 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 130க்கும் மேற்பட்ட போலீசார் ஏமாற்றமடைந்துள்ளனர். இதில் ஒரு சிலர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங் களே உள்ளன. காலத்தோடு பதவி உயர்வு வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக