உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

மின் தடையால் கரும்பு, வாழை, மணிலா பயிர்கள் கருகும் அபாயம்! மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவிக்க கோரிக்கை


கடலூர் : 

                மின் பற்றாக்குறையால் கடலூர் அடுத்த கேப்பர் மலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுள்ள மணிலா, கரும்பு, வாழை, உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விவசாயிகளுக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
            கடலூர் அடுத்த வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், ராமாபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், வெள்ளக்கரை, ஒதியடிக்குப்பம், காட்டுப்பாளையம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தற்போது வாழை, கரும்பு, மணிலா, தர்பூசணி, உளுந்து மற்றும் ரோஜா, கனகாம்பரம், காக்கட்டான் உள்ளிட்ட பூ வகைகளும் பயிரிடப்பட்டுள்ளது. இதில் மணிலா, உளுந்து பயிர்கள் அறுவடையாகும் தருணத்திலும், வாழை பூப்பூத்து குலை வரும் பருவத்திலும் உள்ளன. ரோஜா, காக்கட்டான், கனகாம்பரம் சீசன் நேரமாகும். அனைத்து பயிர்களுமே போர்வெல் மூலமே பாசன வசதி பெற்று வருகின்றன. சில இடங்களில் கிணற்று பாசனம் பெறுகின்றன. அப்பகுதிகளில் போர் வெல் பாசனத்திற்காக இரண்டு ஆண்டிற்கு முன்பு மும்முனை மின்சாரம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்டது. அப்போதே விவசாயத் திற்கு மின் பற்றாக் குறை ஏற்பட்டு விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். இந்நிலையில் 6 மணி நேரமாக இருந்த மும்முனை மின்சாரத்தில் 2 மணி நேரத்தை குறைத்து பகலில் 4 மணி நேரம், இரவில் 4 மணி நேரம் மட் டுமே மின்சாரம் கடந் தாண்டு வழங்கப்பட்டது. தற்போதும் இதே நிலையே நீடித்து வருகிறது. ஆனால் மும்முனை மின்சாரம் எந்த நேரத்தில் வழங்கப்படுகிறது என தெரியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்துறையினர் அவர்களுக்கு விருப்பப்பட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் வழங்கி வருகின்றனர். மேலும் மின்சாரம் வழங்கும் நேரமும் அறிவித்த நேரத்தை விட கூடுதலாக குறைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் வயலில் ஈரப்பதம் முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. மின் பற்றாக்குறையால் போர் வெல்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு, வாழை, மணிலா, பூச்செடிகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கருகும் அபாயத்தில் உள்ளன. எந்த நேரத்தில் மும் முனை மின்சாரம் வழங் கப்படுகிறது என தெரியாமல், விவசாயிகள் இரவு, பகல் என பாராமல் வயல் களில் காத்துக்கிடக்கின்றனர். மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிராமங்களில் உள்ள குடிநீர் போர் வெல்களும் இயக்கமுடியாமல் பொது மக்களும் குடி நீருக்கு அவதியடைந்து வருகின்றனர்.

டிரான்ஸ்பார்மர்கள் பழுதை உடனே சரி செய்வதில்லை : 

                     கடலூர் அடுத்த சான்றோர்பாளையத்தில்  ஆறுமாதங்களுக்கு முன்பு புதிதாக அமைப்பதாக இருந்த டிரான்ஸ்பார்மர் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை அமைக்கப்படவில்லை. இது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைநதால் சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தாலும் அதனை உடனடியாக சரி செய்து கொடுப்பதில்லை.  ஒரு மாதம், இரண்டு மாதங்கள் கழித்தே சரி செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior