உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

பண்ருட்டி தொகுதி காங்., உட்கட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு : மேற்பார்வையாளர்களாக நடித்த 4 பேரிடம் விசாரணை

பண்ருட்டி :

               பண்ருட்டி இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், தேர்தல் மேற் பார்வையாளர் என கூறிய புதுச்சேரி ஆசாமிகள் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

              கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள சக்கரபாணி திருமண மண்டபத்தில் கடந்த 6ம் தேதி முதல், சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, கட்சியின் லோக்சபா தேர்தல் அலுவலர் காசீம் அலையன் தலைமையில், தொகுதி தேர்தல் அலுவலர் ஜோஸ் மேற்பார்வையில் ஓட்டுப் பதிவு நடந்து வருகிறது. இவர்களுடன் தேர்தல் மேற் பார்வையாளர்கள் என கூறிக் கொண்டு நான்கு பேர் கடந்த இரண்டு நாளாக வலம் வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல், வீரா, மூர்த்தி உள்ளிட்டோர், நேற்று தேர்தல் அலுவலர்களிடம் உங்களுடன் இருக்கும் நான்கு பேர் யார்? தேர்தல் மேற்பார்வையாளர் என்றால் அடையாள அட் டையை காட்டுமாறு கூறினர். தேர்தல் அலுவலர்கள் இருவரும் மழுப்பலாக பதில் கூறினர். ஆவேசமடைந்த கட்சி நிர்வாகிகள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த 4 பேரையும் கைது செய்யக் கோரி, சிறை பிடித்ததால் பதட்டம் நிலவியது. தகவலறிந்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் அஸ்கர் அலி மற்றும் போலீசார் விரைந்து வந்து, தேர்தல் அலுவலர்களுடன் இருந்த நான்கு பேரையும் போலீஸ்  ஸ்டேஷனுக்கு அழைத் துச் சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் புதுச்சேரி மாநில வடக்கு மாவட்ட காங்., பொதுச் செயலாளர் வின்சென்ட் ராஜ், சுப்பையா நகர் சந்திரசேகர், நெல்லித்தோப்பு சேகர், டிரைவர் கார்த்திகேயன் எனத் தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உட்கட்சி தேர்தலில், கட்சி மேலிடம் அனுப்பிய தேர்தல் அலுவலருடன், போலியாக  மேற்பார்வையாளர் எனக் கூறிக்கொண்டு நான்கு பேர் தேர்தல் பணிகளை கண்காணித்து வந்த சம்பவம் கட்சியினரிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior