நெல்லிக்குப்பம் :
நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் மளிகை பொருள் வாங்கினால் தான் சர்க்கரை வழங்கப்படுமென கூறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு ரேஷன் கார்டிற்கு இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய். இதனால் பொதுமக்கள் ரேஷன் கடையில் சர்க் கரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு மிளகாய் தூள், மளிகை சாமான், கோதுமை மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை 50 ரூபாயிற்கு வாங்கினால் மட்டுமே சர்க்கரை வழங்கப்படும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனை பொதுமக்கள் சிலர் தட்டிக் கேட்டால், ஓடாத பொருட்களை கொடுத்து கட்டாயம் விற்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். பிறகு நாங்கள் என்ன செய்வது என விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். மக்களுக்கு தேவையான பொருட்களை வழங் கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக