பண்ருட்டி :
பண்ருட்டி பகுதியில் பலா விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பண்ருட்டி என்றாலோ அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். பண்ருட்டி பகுதியில் மானவாரி மற்றும் பாசனம் என மொத்தம் 2,500 ஏக்கர் பரப்பளவில் பலா மரம் பயிரிடப்பட் டுள்ளது. இதில் பாசனப்பகதி பலாப்பழத்தைவிட, மானவாரி நிலத்தில் விளையும் பலாப்பழம் கூடுதல் ருசியாக இருக்கும். தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலா விளைச்சல் இருந்த போதிலும், பண்ருட்டி பகுதி பலாப்பழம் வெள் ளையாக இல்லாமல் தங் கம் போல் கலர் வருவதோடு, ருசியாகவும் இருக் கும். இதன் காரணமாகவே சீசன் நேரத்தில் பண்ருட்டியில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு பாலா பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை சீராக இருந்ததால், மானவாரி நிலங்களில் உள்ள பலாமரங்கள் செழித்து தற்போது பலாக் காய்கள் அதிகம் காய்த்துள்ளன. கூடுதல் விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது விற்பனைக்கு வரும் பலாப்பழங்கள் கூடுதல் சுவையில்லாவிட் டாலும் கிலோ 20 ரூபாய் விலை போகிறது. ஏப்ரல் முதல் வரும் பலாப்பழம் கிலோ 10 ரூபாயாக குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக