கடலூர் :
கேபிள் "டிவி' தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேபிள் "டிவி' தொழிலாளர்களை இனம் கண்டு அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்குவது போல், பல்வேறு உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக கேபிள் "டிவி' தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய விண்ணப்பம் மற்றும் தகுதிகள் குறித்தான விபரங்களுக்கு கலெக்டர் அலுவலத்தில் செயல்பட்டு வரும் இலவச டிவி பிரிவில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பதிவு செய்திட கட்டணம் ஏதுமில்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக