உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்


கடலூர் :

             மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

சி.முட்லூர்: 

                 அரசு கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரேமகுமாரி வரவேற்றார். பேராசிரியர்கள் சித்ரலேகா, பாலசுப்ரமணியன், சாந்தி முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் சுவேதகுமார் பரிசு வழங்கினார்.

வேப்பூர்: 

                  அய்யனார் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் மோகன் தலைமை தாங்கினார். முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர்கள் சாமிநாதன், கந்தசாமி முன்னிலை வகித்தனர். கல்வி ஆலோசகர் வசந்தமல்லிகா கவுரவிக்கப்பட்டார்.

கடலூர்: 

                  குமாரப்பேட்டையில் நடந்த விழாவிற்கு சிப்காட் ஜேஸிஸ் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ஹாஜாமொகிதீன் முன்னிலை வகித்தார். ஜூனியர் சேம்பர் தலைவி உஷாராணி, அனுசுயா சிறப்புரையாற்றினர். போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மண்டல இயக்குநர் சத்தியா, நாகராஜன், ரகுமான்பேகம், சைபுதீன், கார்த்திகேயன் பரிசு வழங்கினர்.

                 கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவிற்கு கருணை கரங்கள் நிறுவன தலைவர் கண்ணன்  தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வள்ளி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் கங்காதரன் வரவேற்றார். ஞானபாரதி, ஓவியர் ரமேஷ், வக்கீல்கள் தாஸ், சாமிக்கண்ணு, மாணவிகள் சரண்யா, ஜோதி பேசினர். பொருளாளர் மகேந்திரவர்மன் நன்றி கூறினார்.

 புவனகிரி: 

                  மங்களம் பெண் கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு முதல்வர் மணவாளன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜதுரை வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் "மந்திரமா தந்திரமா' எனும் நிகழ்ச்சி நடத்திக் காட்டினார். மாநில நிர்வாகிகள் கவிதா, நாராயணன் ஆகியோர் பெண்களின் சமத்துவம், பெண் சிசு கொலை தவிர்ப்பு, வரதட்சணை கொடுமை எனும் தலைப்பில் பேசினர். நிர்வாக இயக்குனர் கலைச்செல்வி, பேராசிரியர் விக்னேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்: 

                  கடலூர் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சுகுமாறன் வரவேற்றார். பெண்களுக்கான சட்ட உதவிகள் குறித்து பி.எஸ்.என்.எல்., மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பை சேர்ந்த தாஸ் உரையாற்றினார். பெண்களுக்கு எதிராக தற்போது செயல்படும் சட்டங்களும், ஓட்டைகளும் குறித்து மருதவாணன் பேசினார். பி.எஸ். என்.எல்., மகளிர் துணைக்குழு சார்பில் விஜயலட்சுமி, வங்கி ஊழியர் மகளிர் துணைக்குழு மீரா, அறிவியல் இயக்கம் சார்பில் காத்ரீன், பால்கி பேசினர். காமாட்சி நன்றி கூறினார்.
  
நெல்லிக்குப்பம்: 

                வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஐக்கிய நாடுகள் தகவல் மையம், ராமச்சந்திரா மிஷன் இணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவிகள் கவுசல்யா, காயத்ரி ஆகியோருக்கு பரிசு அளித்தனர். பள்ளி மாணவி சசிகலாவின்  நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.

மேல்பட்டாம்பாக்கம்: 

                 கிருஷா அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு விமலா தலைமை தாங்கினார். ராஜலட்சுமி, அமுதா முன்னிலை வகித்தனர். அருள்மொழி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, அன்னை தெரசா சேவை மைய மாநில தலைவர் ரத்தினம், திரிசங்கு, கவிஞர் கோபி சிறப்புரை ஆற்றினர். சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior