கடலூர் :
கடலூர் நகர மக்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ள நகராட்சி மைதானம் மண் மற்றும் காரைகள் கொட்டி சீரழிக்கப் பட்டு வருகிறது.
கடலூர் நகர மக்களுக்கு பொழுது போக்கு இடமாக சில்வர் பீச் மற் றும் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மைதானம் விளங்கி வருகிறது. பீச்சிற்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் வயதானவர்கள் தினசரி மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள நகராட்சி மைதானத்திற்கு வருகின்றனர். திறந்த வெளியாக உள்ள இந்த திடலில் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாலை நேரங்களில் கூடி பேசி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் மாலை நேரங்களில் நகராட்சி மைதானம் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால் கூட்டம் அதிகரிக்க துங்கியுள்ளது. மக்களின் பொழுது போக்கு இடமாக உள்ள இந்த மைதானத்தை சமீப காலமாக மண் மற்றும் சிமென்ட் காரைகளை கொட்டி பாழாக்கி வருகின்றனர். இவ்வழியே தினசரி நகராட்சி அதிகாரிகள் பலர் கடந்து சென்று வந்த போதிலும், இதனை கண்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக நேற்று மஞ்சக்குப்பத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய மண் மற்றும் கற்களை டிராக்டரில் ஏற்றி வந்து மைதானத்தில் கொட்டினர். இனியும் நகராட்சி நிர்வாகம் விழித்துக் கொள்ளவில்லை எனில் மிக விரைவில் இந்த மைதானம் குப்பை கொட் டும் திடலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக