நெல்லிக்குப்பம் :
கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் பல ஆண்டாக உயர்த்தவில்லை. ஆனால், டீசல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டு வரவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் தாங்களாவே கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். வெள்ளைகேட்டில் இருந்து கடலூர் செல்ல 3 .50 ரூபாய் வசூல் செய்ததை 4 ரூபாயாகவும், வாழப்பட்டு, மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து கடலூருக்கு 5.50 ரூபாயாக இருந்ததை 6 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தியுள்ள கட்டணத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக