கடலூர் :
கடலூர் திருப்பாதிரிபுலியூர் முத்தாலம்மன் கோவிலில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் உள்ள முத்தாலம்மன் கோவில் தேர் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இத்தேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து இயங்காமல் இருந்தது. இந்நிலையில் முத்தாலம்மன் தேர் திருப்பணி கமிட்டியினர் மற்றும் பொது மக்கள் இணைந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவந்திபுரம் ஸ்தபதிகள் தலைமையில் கள்ளக்குறிச்சி, திருவதிகையைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர் பீடம் இலுப்பை மரத்தாலும், சிலைகள் வேங்கை மரத் தாலும், சக்கரங்கள் இரும்பாலும் அமைக்கப்படுகிறது. தேரின் அடி பீடம் 10 அடி உயரம், மேல் பகுதி 21 அடி உயரம், 11 அடி அகலத்தில் மொத்தம் 31 அடி உயரத்தில் தேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி ஐந்து மாதங்களில் முடிவடையும் என தேர் திருப்பணி கமிட்டியினர் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக