சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., இன்ஜினியரிங் படித்த ஜார்கண்ட் மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் இறந்தார். இந்த சம்பவத் தால் ஏற்பட்ட ரகளையில் போலீசார் விரட்டி அடித்ததில் அருகே உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்து சுமித்குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கடலூர் டி.ஆர்.ஒ., நடராஜனை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த 5ம் தேதி சிதம்பரத்தில் சம் பவம் நடந்த இடங் களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரித்தார்.தாசில்தார் காமராஜ் மற்றும் திருவேட்களம், சிதம்பரம் நகரம், கொத்தங்குடி பகுதி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர் பாக பொதுமக்களிடம் வரும் 18ம் தேதி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொது விசாரணை நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக