திட்டக்குடி :
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும் என எம்.எல். ஏ., செல்வப்பெருந்தகை கூறினார்.
திட்டக்குடி தொகுதியில் எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பின்னர் எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை கூறியதாவது:
தொகுதியில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி - தொழுதூர் மாநில நெடுஞ் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க 19.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முருகன்குடி மேம்பால பணி 2011 மே மாதம் நிறைவு பெறுமென பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி தாமதமாகி வருகிறது. இருப்பினும் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் கரைகளை வலுவாகவும், தரமாகவும் சீரமைத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இறையூர் ரயில்வே மேம்பால பணிக்காக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டியள்ளது. அப்பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்த பின் வீடுகளை காலி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அடிப் படை வசதிகளை நிறைவேற்ற அரசு ஆய்வு செய்ய வேண்டும். மின்தட்டுப் பாட்டை போக்கிட காற்றாலைகளுக்கு அனுமதி வழங்கி நிரந்தர தீர்வு காண வேண்டும். மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா வரவேற்கத்தக்கது. அதில் உள் ஒதுக் கீடு வழங்க வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட மகளிர் மட்டுமே பயனடைய முடியும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட மாநில அரசுகளே விலை நிர்ணயம் செய்யவும், தேவையான உணவு பொருட் களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த தவறிய மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை கூறினார். பேட்டியின்போது பி.எஸ்.பி., மாவட்ட தலைவர் கருப்புசாமி, செயலாளர் காமராஜ் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக