கடலூர் :
கடலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நடக்கும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.
கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவுகள் புதுப்பிக்கப் பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய் தார். பின்னர் இணை இயக் குனர் ஜெயவீரக்குமார், நிலை மருத்துவர் கோவிந் தராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பணிகள் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பகுதி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. நோயாளிகள் வசதிக்காக அவசர சிகிச்சை பகுதி மூன்று பிரிவுகளாக பிரித்து, கூடுதல் படுக்கைகளுடன் கூடிய ஒரே அறையாக மாற்றி குளிர் சாதன வசதி செய்யப்படுகிறது. முன் பகுதியில் டாக்டர்கள் அறை இரண்டு படுக்கைகளுடன் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் 10 நாளில் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். அப்போது டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக