நெய்வேலி:
நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்கியூபாலம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக மத்திய அமைச்சர் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் இதர நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினார். ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் கண்டன உரையாற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக