கடலூர் :
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் புகழேந்தி வரவேற்றார். குமாரவேலு, ரஞ்சித்குமார், இந்துமதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த அக்டோபர் 3ம் தேதி மின்வாரிய அமைச்சர் அறிவித்த உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் இடையேயான 2:3 விகிதாச்சாரத்தை வாரியம் முழுவதும் உடன் அமல் படுத்த வேண்டும். மின் வாரியத்தை நிர்வகித்திட மனித வள மேம்பாட்டில் பயிற்சி பெற்றவரையே நியமிக்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக