உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக் கல்வியில் மேலும் 17 புதிய பாடங்கள் தொடக்கம்



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விண்ணப்ப விற்பனை தொடக்க விழாவில் மாணவிக்கு முதல் விண்ணப்பத்தை வழங்கினார் 

 சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் பயிலுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

                அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மைய 2010-11 ஆண்டு அனுமதி சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கு தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், துணை கட்டுப்பாட்டு அதிகாரி தவமணி, மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்றனர்.

பின்னர் துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

             தொலைதூரக்கல்வி மையம் முன்னேற்றப் பாதையில் 31-வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. தமிழ், இசை என்ற சொன்னாலே அதை வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்திய அளவில் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் அண்ணாமலைப் பல்கலை 6-வது இடத்தில் உள்ளன. சமுதாய மாற்றத்துக்கு ஏற்றவாறும், வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறும் புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  தொலைதூரக் கல்வி மையம் மூலம் 525 பாடத் திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 17 புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. சில குறிப்பிட்ட துறைகளில் 12 நிறுவனங்களுடன் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி பாடத் திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.  வெவ்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் படிப்பு மையங்களில் தேவையான செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகத்தில் 6 படிப்பு மையங்களும், வெளி மாநிலங்களில் 4 படிப்பு மையங்களும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மையங்களும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும்.

               சென்னை, புதுதில்லி உள்ள இணைப்பை பயன்படுத்தி சில பாடத் திட்டங்களுக்கு நேர்முக வகுப்பு டெலிகான்பிரன்ஸ் மூலம் நடத்தப்படும். மாணவர்கள் சிரமத்தை குறைக்க மேலும் 23 மையங்களில் அனுமதி சேர்க்கை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பழைய மாணவர்களுக்கு மேலும் பட்டம் பெறவும் 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

                     உகாண்டா, எத்தியோப்பியா, இந்தோனேசியா நாடுகளில் தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மையங்களை அதிகப்படுத்தி இந்தியா முழுவதும் 134 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்கலை வளாகத்தில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றார் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior