உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

நவரைப் பட்டம் நெல்லுக்கு மேலுரம்

 கடலூர்:

              நவரைப் பட்ட நெல் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு கீழ்காணும் ஆலோசனைகளை, கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

                 நவரைப்பட்ட நெல் பயிருக்கு மேலுரம் அவசியம் இடவேண்டும். குறுகியகால நெல் ரகங்களுக்கு மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிட வேண்டும். அல்லது வேளாண் துறை சிபாரிசுப்படி, ஏக்கருக்கு 50- 20- 20 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து தரவல்ல ரசாயன உரமிட வேண்டும்.அடியுரமாக 25 சதவீதம் தழைச்சத்து, 100 சதவீதம் மணிச்சத்து, 50 சதவீதம் சாம்பல் சத்து இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்து 75 சதவீதம் சாம்பல் சத்து 50 சதவீதம் ஆகியவற்றை மேலுரமாக இடவேண்டும். நட்ட 15 நாளில் தூர்கட்டும் பருவத்தில் மேலுரமாக 10 கிலோ தழைச்சத்து தரவல்ல யூரியா உரம் 22 கிலோ இடவேண்டும். 2-வது மேலுரமாக நட்ட 30 நாளில் கதிர்முனை உருவாகும் பருவத்தில் 10 கிலோ தழைச் சத்துக்கு யூரியா 22 கிலோவும்,சாம்பல் சத்து 10 கிலோ தரவல்லபொட்டாஷ் உரம் 17 கிலோவும் இடவேண்டும்.3-வது மேலுரமாக நட்ட 45 நாளில் பூக்கும் பருவத்தில் 10 கிலோ தழைச்சத்து தரவல்ல யூரியா 22 கிலோ இடவேண்டும். மேலுரம் இடும்போது நிலத்தில் உள்ள நீரை வடித்து, போதுமான ஈரப்பதம் இருக்கும்போது உரமிட வேண்டும். மேலுரம் இட்ட 24 மணி நேரம் கழித்து நீர்பாய்ச்ச வேண்டும்.நவரை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சரியான தருணத்தில் மேலுரமிட்டு, கூடுதல் மகசூல் பெற்றுப் பயனடையக் கேட்டுக் கொள்கிறேன் என்று செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior