உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

தொலைதூர கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விற்பனை

 சிதம்பரம் : 

               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான விண்ணப்பம் விற்பனை நேற்று துவங்கியது.
 
             துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி, தொலைதூர கல்வி இயக்குநர் நாகேஸ்வரராவ், தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், துறைத் தலைவர்கள் பழனியப்பன், ராஜேந்திரன், பாஸ்கரன், பாலசுப்ரமணியன், தேர்வுத்துறை அதிகாரி தவமணி, துணைவேந்தரின் நேர்முக செயலாளர் ராஜசேகர், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
துணைவேந்தர் ராமநாதன் கூறுகையில், 

          'தொலைத் தூர கல்வி மையம் துவக்கி 31வது ஆண்டு ஆகிறது. இந்த ஆண்டு சேர்க்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத் திற்கும் அதிகமாக இருக்கும். சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப பாட திட் டங்களும் மாற்றி அமைத்து தருகிறோம். தொலைதூர கல்வியில் ஏற்கனவே உள்ள 525 பாட திட்டங்களுடன் புதிதாக 17 பாட திட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளது.
 
          சில குறிப்பிட்ட துறைகளில் வேறு பல நிறுவனங்களுடன் கட்டமைப்பு வசதிகளை உபயோகப்படுத்தி 12 நிறுவனங்களுடன் ஒப்பந் தம் ஏற்பட்டுள்ளது. 'ஒய்ட் ஏரியா நெட் ஒர்க்' தமிழ்நாட்டில் 6 இடங்களிலும், வெளிமாநிலங்களில் 4 இடங்களில் இந்த இணைப்பை பயன்படுத்தி 'டெலி கான்பரன்ஸ்' மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும் 23 மையங்களில்  உடனடி அட்மிஷன் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைதூர கல்வியில் இரண்டு பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 50 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப் படுகிறது. ருவாண்டோ, எத்தியோப்பியா, இந்தினோஷியா ஆகிய நாடுகளிலும் தொலைதூர கல்வி பாடத்திட்டங்களை படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 'ஒய்ட் ஏரியா நெட்வொர்க்' 10 இடங்களில் இருந்து மற்ற இடங்களிலும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர கல்வியில் 134 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தோலைதூர கல்வியில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.   

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior