நடுவீரப்பட்டு :
நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மகளிர் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு சிகிச்சை ஆகிய 6 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள துணை சுகாதார நிலையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 45 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இதில் 30 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சசிகலா, சுரேஷ் குமார், புள்ளியியலாளர் கிருஷ்ணராஜ், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக