உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சிறு விடுப்பு போராட்டம்

 கடலூர் : 

                தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டம் நடத்தினர்.
 
              ஊரக வளர்ச்சித் துறையில் மாவட்ட மாறுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்து அனைத்து அலுவலர்களையும் மீண்டும் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்த வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் மற்றும் களப்பணி ஆய்வை கைவிட வேண்டும். 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்திற்கென ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊரக வளர்ச்சி இயக்கம் ஆகிய அலுவலகங்களில் தனி ஊழியர் கூட்டமைப்பு ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம் நடத்தினர்.
 
     இதனால் மாவட்ட வளர்ச்சி முகமை, ஊரக வளர்ச்சிப் பிரிவு, ஊராட்சி ஒன்றியம் ஆகிய அலுவலகங்களில் பணிகள் நடைபெறவில்லை.
 
சிறுபாக்கம்: 

              மங்களூர், நல்லூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் விடுப்பு போராட் டத்தால் 130 கிராம வளர்ச் சிப்பணிகள் பாதித்தது. மங்களூர் ஒன்றியத்தில் 62 பேரும், நல்லூர் ஒன்றியத்தில் 65 பேரும் விடுப்பிலிருந்தனர். ஒட்டு மொத்த விடுப்பு போராட்டத்தால் இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த 130 கிராமங்களின் வளர்ச்சிப்பணிகள் நேற்று முற்றிலுமாக பாதிக்கப் பட்டன.
 
பரங்கிப்பேட்டை: 

                     பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 52 பேர் பணிக்கு வர வில்லை. ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க ஊழியர்கள் 65 பேர் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior