உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு கடந்தவர்களுக்கு உதவித்தொகை

 கடலூர் : 

           மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 30 வரை முடிடையும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 

                  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வயது 45, மற்றவர்களுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவர்களாக இருத்தல் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க கூடாது. ஆனால் அஞ்சல் வழி கல்வியில் பயில்வோர் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் படித்தவராக இருத்தல் அவசியம். ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். கல்வி சான்றுகளின் அசல், வேலைவாய்ப்பக அசல் அட்டை நேரில் காண்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.  விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் 1 மணிவரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை பெறப் படும். இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பங்கள் திருப்பி செலுத்த இறுதி நாள் மே 31ம் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior