உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வுக்கு மாஜி.,க்கள் எதிர்ப்பு

 கடலூர் :  

                 எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
                       தமிழ்நாடு எச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு கடலூர் புதுப்பாளையம் மெயின்ரோடில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இதில் இச்சங்கத்தில் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்த அமைப்பில் 2,000க்கும் மேற்பட்டவர்கள் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இந்த சங்கம் மூலம் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இச்சங்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்குகிறது.
 
                நிதியுதவியை முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சேராமல் நிர்வாகிகள் பொறுப்பில் இருந்தவர் கள் கையாடல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக முன்னாள் தலைவர் தனபால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதை தட்டிக்கேட்ட நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். தற்போது தலைவராக ராஜேஸ்வரி, செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக தனலட்சுமி நிர்வகித்து வருகின்றனர். நேற்று பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதாக இருந்தது. இதையறிந்த முன்னாள் நிர்வாகிகள் வித்யானந்தன், உஷா, ரவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகம் முன் திரண்டு கோஷமிட்டனர். 'எங்களுக்குத்தெரியாமல் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க கூடாது. நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக இந்த அமைப்பில் உள்ளோம். ஊழல் நடந்ததை தட்டிக் கேட்டதால் வெளியேற்றப்பட்டோம்' என்றனர்.
 
இது குறித்து ராஜேந்திரன், செந்தில்குமார் கூறியது 
                    'அவர்கள் எங்கள் அமைப்பில் இருந்து  பிரிந்த தனி அமைப்பு துவங்க இருப்பதால் இங்கு பிரச்னை செய்கின்றனர். எனவே இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளோம்' என்றனர். நிதி உதவி வழங்கும் அரசுகள் முறையான விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior