உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

உஷ்ணத்தை தணிக்கும் 'மட்டிக்கறி'


கிள்ளை : 

             கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிதம்பரம் அருகே வெள்ளாற்றுப் பகுதியில் கிடைக் கும் 'மட்டிக்கறிக்கு' மவுசு கூடியுள்ளது.
 
                கோடை காலம் துவங்கிய நிலையில் பலருக்கு அம்மை மற்றும் மஞ்சள் காமாலை என உஷ்ணத்தால் பல நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வெள்ளரி பிஞ்சு, சப்போட்டா, ஆரஞ்சு, கமலா, தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழவகைகளை நகரில் வசிப்போர் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.  கிராமப்பகுதி மக்கள் கடற்கரையோரம் கிடைக்கும் 'மட்டிக்கறியை' விரும்பி சாப்பிடுவதால் உடலுக்கு  குளிர்ச்சியும், ஆரோக் கியம் கிடைப்பதுடன், உஷ்ணத் தால் ஏற்படும் மஞ்சள் காமாலை மற்றும் அம்மை போன்ற நோய் கள் பெரும்பாலும் நெருங்குவதில்லை.
 
                  சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில், முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பொன்னந்திட்டு, மடுவங்கரை வெள்ளாறு பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் மட்டிக்கறியை சுற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பல கி.மீ., தொலைவு சென்று கொண்டு வருகின்றனர். மட்டிக்கறியின் மருத்துவ குணத்தை உணர்ந்த கேரளா, நாகர்கோவில், திருநெல்வேலி பகுதியில் பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பிச்சாவரத்திற்கு படகு சாவாரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
 
இதுகுறித்து ஆற்றுப்படுகையில் மட்டிக்கறி பிடித்தவர்கள் கூறுகையில், 
            
            'இப்பகுதியில் பால் மற்றும் வரி மட்டிகள்  அதிகம் கிடைக்கிறது. வரி மட்டிக் கறியின் தன்மை மிகவும் கடினமாக இருக்கும். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதனால் கிளிஞ்சலுக்காக மட்டும் பிடிக்கப்படும். தற்போது வரி மட்டிகள் அதிகளவில் கிடைப்பதில்லை. பால் மட்டிக்கறி மிகவும் மிருவதாக இருக் கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். பால் மட்டிக்கறி இப்பகுதியில் அதிகளவில் கிடைக்கிறது. இதை தண்ணீரில் வேக வைத்தால் வெள்ளை நிறத்தில் வரும் தண் ணீரை 50 மில்லி அளவிற்கு குடித் தால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல நோய் நெருங்காது' என்றனர்.
 
இது குறித்து அண்ணாமலை பல்கலைக் கழக கடல் வாழ் உயராய்வு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,

                மசல் என்றழைக்கப்படும் இந்த இனம் பல வகைகளில் உள்ளது. 'பெர்னா விர்டிஸ், பெர்னா இன்டிகா' வகையை சார்ந்தது. வெள்ளாற் றுப் படுகையில் நல்ல தண்ணீரும், உவர்ப்பு நீரும் கலக்கும் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கிடைக்கும். மீனை விட புரோட்டின் குறைவு; 20 சதவீதம் புரத சத்து உள்ளது. கடலோரப் பகுதியில் எளிமையாக கிடைக்கும் கடல் உணவு நோய் எதிர்ப்பு  என்பதை முன் னோர்கள் சொன்னதை கிராமப் புறத்தில் உள்ளவர்கள் நம்புகின்றனர். இந்த மட்டிக்கறி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior