பண்ருட்டி :
பண்ருட்டி பஸ் நிலையத்தில் கடலூர், விழுப்புரம் செல்லும் பயணிகள் நிற்பதற்கு இடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதி, பயணிகள் உட்காருவதற்கு இருக்கை வசதிகள் ஏதும் இல்லை. தற்போது பயணிகள் காத்திருக்க அமைத்த நிழற்குடையில் பழ வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் உட்காரவும், நிற்கவும் இடமின்றி அவதியடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என அப்போதைய கமிஷனர் மதிவாணன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.ஆனால் அதன்பின் நிழற்குடை அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் பஸ்களும் அந்தந்த பஸ்சுக்குரிய இடத்தில் (கட்டைகளில்) நிற்காமல் பஸ் நிலையம்முழுவதும் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக