கடலூர் :
கடலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்படுமா என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோடை காலத்தில் பள்ளி விடுமுறையின் போது மாணவர்கள் குதூகலிக்க பொழுது போக்கு அம்சங்களுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது வழக்கம். வசதி படைத்தவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங் களுக்கு சென்று பொழுதை கழிப்பார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளூரிலேயே நடக்கும் விழாக்களை பார்த்து மகிழ்ச்சி அடைவர். இதற்காக அரசு ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அரசின் திட்டங்கள் யாவும் அரங்குகள் அமைத்து மக்களுக்கு விளக்கியும், பல்வேறு போட்டிகள் நடத்தி சிறுவர், பெண்களை ஊக்குவித்தும், கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கடலூர் மாவட்டத்தில் நீண்ட சில்வர் பீச் அமைந்திருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். கடலூர் நகர மக்களுக்கு வேறெந்த பொழுது போக்கு அம்சமும் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இங்கு 5 நாட்கள் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோடையின் போது லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் கோடை விழா நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு சில்வர் பீச்சில் கோடை விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக