உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

துணை முதல்வர் திறந்து வைத்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: வசதிகளின்றி மக்கள் தவிப்பு

 நடுவீரப்பட்டு:

           நடுவீரப்பட்டில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித் தும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள்  இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
 
                பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்  துவங்கப்பட்டது.  இங்கு நடுவீரப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் வெள் ளக்கரை, காரைக்காடு, திருவந்திபுரம், மாதலம்பட்டு, தூக்கணாம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப் பில் 30 படுக்கை வசதி கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை  கடந்த  செப்டம்பர் மாதம் காடாம்புலியூரில் நடந்த அரசு விழாவில் துணை முதல்வர் திறந்து வைத்து மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவித்தார்.
 
                  இங்கு தற்போது  வெளி நோயாளிகள் 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு மாதத்திற்கு 30 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இதர வசதிகள் இல்லை. மேலும் போதுமான ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. மேலும், தனியாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சிசு பராமரிப்பு வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆபத்தான நிலையில் உள்ளவர் களை கூட மேல் சிகிச் சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லாமல் உள்ளது.
 
                  துணை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக அறிவித்தும் போதிய வசதிகளின்றி இன்னமும் 'சுகவீனமாக' இருப்பது வேதனையாக உள்ளது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேண்டிய மருத்துவ உபகரணங்கள் வழங்கிடவும் மற்றும் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior