உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

ஆலம்பாடி 'நண்டோடை' மதகு ஷட்டர் சீரமைக்கப்படுமா? : 7,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

புவனகிரி:

                  புவனகிரி அருகே 7,000 ஏக்கர் பாசனம் பெறும் நண்டோடை மதகு உடைந்து விழும் நிலையில் இருப்பதுடன் ஷட்டரும் துருபிடித்து உடைந்துள்ளதால் பாசன நேரங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். புவனகிரி அடுத்த கபு.மணவெளியிலிருந்து ஆலம்பாடிக் கிடையே 'நண்டோடை' அல்லது 'தளவார் ஓடை' எனப்படும் ஓடை உள்ளது. சேத்தியாத்தோப்பு அணைக் கட்டிலிருந்து தண்ணீர் மெயின் வாய்க்காலான முரட்டு வாய்க் காலிலிருந்து 'நண்டோடை' வழியாக சாத்தப்பாடி ஏரிக்கு செல்கிறது.
                  'நண்டோடை'யில் கட்டப்பட்ட மதகில் மழை மற்றும் வெள்ள காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கிளை வாய்க்கால்கள் மூலம் வயலாமூர், பூவாலை, மணிக் கொல்லை, பு.மணவெளி, வடக்கு திட்டை, தெற்கு திட்டை, கிருஷ்ணாபுரம், தலைக்குளம், சாத்தப்பாடி  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 7,000 ஏக் கர் விளை நிலங் கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
 
                   காலப்போக்கில் 'நண்டோடை மதகு' பராமரிப் பின்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக மதகில் உள்ள 7 ஷட்டர்களின் இரும்பு பிளேட்டுகள் துருப்பிடித்து செரித்து விழுந்துள்ளது. மேலும், பிளேட்டுகள் மற்றும் கம்பிகளை சமூக விரோதிகள் உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். இதனால் 'நண் டோடை' மதகு ஷட்டரில் பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள காலங்களில் 'நண்டோடைக்கு' வரும் தண்ணீரை துருப்பிடித்து செரித்துப்போன 'ஷட்டர்' அருகே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் எப்போதும் ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் செய்த நிலை மாறி தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு போகம் கூட பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior