உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

அதிகாரிகளின் அலட்சியம்: தரமற்ற சிமென்ட் சாலைகள்

 நெல்லிக்குப்பம் : 

                   சிமென்ட் சாலைகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால் ஓரிரு ஆண்டுகளில் உடைந்து வீணாகும் நிலையில் தரமற்றதாக போடப்படுகிறது.
 
                  சிமென்ட் சாலை அமைக்க முதலில் மணல் பரப்பி அதன் மீது ஒன்றரை ஜல்லியுடன் சிமென்ட் கலந்து போட வேண்டும். சில நாட்கள் சென்ற பிறகு முக்கால், அரை ஜல்லியுடன் சிமென்ட் கலந்து மட்டமாக போட்டு முடிக்க வேண்டும். சாலை பணி முடிந்தவுடன் மறுநாளில் இருந்து சாலையில் குறைந் தது 10 நாட்களுக்கு தண்ணீர் தேக்கி வைத்தால் தான் வலுவுடையதாக நீண்ட காலம் உழைக்கும். இந்த நடைமுறைகளை ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவதில்லை. சாலை போடுவதோடு பணி முடிந்து விட்டதாக நினைத்து உடனே காசோலை வழங் கப்படுகிறது. அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என நினைத்து காசோலையை வழங்கி விடுகின்றனர். சிமென்ட் சாலைகள் எதிர்பார்த்த அளவு பல ஆண்டுகள் நன்றாக இருப்பதில்லை. வெள்ளப்பாக்கம் விவசாய பண்ணைக்கு செல்லும் சாலை 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அச்சாலையில் சில நாட்களுக்கு முன் செம்மண் ஏற்றிய லாரி சென்றதில் சிமென்ட் சாலை பல இடங்களில் பள்ளமானது. சிமென்ட் சாலைகளை முறையாக அமைத்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்ற உணர்வுடன் அதிகாரிகள் பணிகளை கண்காணிக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior