கடலூர் :
கடலூரில் உள்ள அனைத்து கோவில் சொத் துக்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
கடலூர் நகர பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் புதுப்பாளையத்தில் நடந்தது. தாமரை வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு குணா முன்னிலை வகித்தார். வக்கீல் சுரேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கடலூர் மாவட்டத்திற்கு வரும் மே 1ம் தேதி வருகை தரும் பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. நோயாளியாக சிகிச்சை பெற வந்த பார்வதி வேலுப்பிள்ளையை போராளியின் தாயாக நினைத்து சிகிச்சை தர மறுத்த இந்திய, தமிழக அரசை பா.ஜ., வன்மையாக கண்டிப்பது. கடலூரில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர்கள் கோபால், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் வரதராஜன், வேம்புராஜன், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக