உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா

பரங்கிப்பேட்டை: 

                  பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் வரும் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள் ளது. இங்கு ஆண்டுதோறும் அரவாணிகள் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வரும் 25ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம் கொடியேற் றத்துடன் விழா துவங்கியது. 21ம் தேதி அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலாவும், 23ம் தேதி மாடுபிடி சண்டை நிகழ்ச்சியும், முக்கிய விழாவான 25ம் தேதி சுவாமி முத்துப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், மாலை அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் ஆந்திரா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரவாணிகள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் தில்லை கோவிந்தன், ஜனார்த்தனன், ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior