உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கம்

                 புவனேஸ்வரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு எழும்பூர் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 21ம் தேதியிலிருந்து இயக்கப்படுகிறது.

              புவனேஸ்வர் - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்றும், விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதைப் பணி முடிந்து திறப்பு விழா நடந்த பிறகு இந்த ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதைப் பணி முடிந்து கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து ரயில் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

                 புவனேஸ்வரிலிருந்து வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.8496) பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்திலிருந்து வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில் (எண்.8495) காலை 7.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு எழும்பூர் வந்தடையும். எழும்பூரிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை மாலை 6.40 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும்.

                  இந்த ரயிலில் ஒரு 'ஏசி' இரண்டடுக்கு பெட்டி, ஒரு 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) பெட்டியுடன், முன்பதிவு செய்யப்படாத சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டி நான்கும் இணைத்து இயக்கப்படுகிறது. குர்தாரோடு, பெர்காம்பூர், விஜயநகரம், தூவாடா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, காரைக்குடி மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior