நெய்வேலி :
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ் வழங்கப்படுகிறது. என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை கருத்தில் கொண்டு போனஸ் வழங்க சேர்மன் அன்சாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி என்.எல்.சி.,யில் பணியாற்றி வரும் 14 ஆயிரத்து 273 தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா, 21 ஆயிரத்து 860 ரூபாய் என மொத்தம் 31 கோடியே 20 லட்சத்து 7,880 ரூபாய் நாளை போனசாக வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் நான்காயிரத்து 21 இன்ஜினியர் மற்றும் அதிகாரிகளுக்கான ஊக்கத் தொகை முடிவு செய்யாததால் அவர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால், எஸ்.1, எஸ்.2, எஸ்.3, இ1 மற்றும் இ2 வரையிலான இன்ஜினியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாக நாளை வழங்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக