உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க மத்திய அரசு குழுவினரிடம் வலியுறுத்தல்

கிள்ளை: 

               கடலூர் மாவடத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க விவசாய சங்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு குழுவிடம் விவசாய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து மத்திய நீர்வள ஆணையர் லால், தலைமை கண்காணிப்பு பொறியாளர் சவுத்திரி ஆகியோரிடம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ரவீந்திரன் அளித்துள்ள மனு: 

                 கடலூர் மாவட்டத்திற்கு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என மொத்தம் 424 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் முறையாக நடக்கவும் விவசாயிகள் கூட்டமைப்பு உயர் மட்ட குழு அமைத்து பணிகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் மழைக்காலத்தில் போதிய வடிகால் இல்லாமலும், நவரை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போது இப்பகுதியில் வாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக 7.5 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாப் பேட்டை பாலத்தில் இருந்து பொன்னந்திட்டு வடிகால் வாய்க்கால்வரை உள்ள கரைகளை பலப்படுத்தி 28 பாசன முதன்மை மதகுகள் கட்டி புதிய ஷட்டர் அமைத்து, கிளை வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior