கடலூர்:
கடலூர் அருகே லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடும் இளைஞர்களால் பல குடும்பங்கள் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது முந்தரி சீசன் துவங்கியுள்ளதால் கடலூரைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மலையோர கிராமங்களில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.
இப்பகுதி இளைஞர்கள் பலர் பகல் நேரத்தில் முந்திரி மற்றும் புளியந்தோப்புகளிலும், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கோவில் மற்றும் பள்ளிக் கூடங்களில் பணம் வைத்து சூதாடி வருகின்றனர். ஆட்டத்திற்கு நபர் ஒருவர் குறைந்தது 5,000 வைப்பதால், தினமும் பல லட்சம் ரூபாய் புழங்குகிறது. சிலர் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பலர் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பறிகொடுத்து விட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக சிலர் நகைகள், இருசக்கர வாகனங்களையும் அடகு வைத்து சூதாடி பறிகொடுப்பதும் அதிகரித்து வருகிறது.
அதன்படி கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சமுதாயக்கூடம், மேற்கு ராமாபுரம் அரசு துவக்கப் பள்ளி, வண்டிக்குப்பம் புளியந்தோப்பு, புதுப்பாளையம் தெற்குவெளி முந்திரிதோப்பு, முருகர் கோவில், காட்டுப்பாளையம் முருகர் கோவில் அருகில், அரசடிக்குப் பம் புளியாந்தோப்பு, திருமானிக்குழி பனந்தோப்பு, சேடப்பாளையம் புலிகுத்தி வாய்க்கால் அருகே உள்ள மாந்தோப்பு, வழிசோதனைப்பாளையம் தெற்கு தெரு ஆலமரத்தடி, கீரப்பாளையம் மேற்குதெரு மாந்தோப்பு, கிழக்கு தெரு ஓடை, ஒதியடிக்குப்பம் புளியந்தோப்பு, அரசடிக்குப்பம் பலாத்தோப்பு, வெள்ளக்கரை பலாத்தோப்பு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான இளைஞர்கள் சூதாடி வருகின்றனர்.
பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப் பட்ட சூதாட்டம் தற்போது நகை மற்றும் பொருட்களை அடகு வைத்து ஆடும் அளவிற்கு சென்றுள்ளதால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதன் காரணமாக சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் சூதாட் டத்தால் பொருட்களை இழந்ததால் குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. அதற்கு முன்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து, விவசாயக் குடும்பங் களை சீரழித்து வரும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக