சிறுபாக்கம்;
காலாவதியான இடுபொருட்களை விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மங்களூர் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
மங்களூர் வட்டாரத்தில் வேளாண்மையில் பயிர் சாகுபடிக்கு தரமான சான்று பெற்ற விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் மிகவும் இன்றியமையாத வேளாண் பொருட்களாகும். இவைகள் அதிக அளவில் தனியார் கடைகளில் உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விற்கப்படுகின்றது. விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களின் பெயர், முகவரி, உற்பத்தி செய்யப்பட்ட நாள், மாதம் மற்றும் இவற்றினை பயன்படுத்தக் கூடிய காலக்கெடு, பேட்ஜ் எண் ஆகியவை விதை மூட்டைகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். குவியல் எண், காலக் கெடு அறிந்தும் விதை மூட்டைகளில் சான்று அட்டைகள் தைக்கப்பட்டுள்ளதா என் பதனை தெரிந்து விவசாயிகள் இடுபொருட்களை வாங்கி பயன்பெற வேண் டும். காலக்கெடு முடிவுற்ற இடுபொருட்களை விநியோகம் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் உரக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக