உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி


           
                  அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.​ இதற்கு முன்னர் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகள் தோல்வியடைந்தன.​ தற்போது திங்கள்கிழமை ஏவப்பட்ட அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏவுகணை சோதனையானது அனைத்து இலக்குகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்ததாக ஒருங்கிணைந்த சோதனை சரக ​(ஐடிஆர்)​ இயக்குநர் எஸ்.பி.​ தேஷ் கூறினார். திங்கள்கிழமை காலை 9.15 மணி அளவில் நகரும் வாகனத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.​ ஐடிஆர் வளாகம்-4-ல் இருந்து இது ஏவப்பட்டது.​ இந்த ஏவுகணை 1,000 கி.கி.​ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.​ 2,000 கி.மீ.​ தூரம் வரை தரையிலிருந்து விண்ணில் சென்று தரை இலக்கை தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.​ அக்னி ஏவுகணையின் பயணப்பாதை முழுவதும் நவீன ரேடாரால் கண்காணிக்கப்பட்டது.​ தவிர,​​ தொலைநோக்கிகள் மற்றும் மின்னணு நோக்கிகள்,​​ கடற்படைக் கப்பல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.​ வங்கக் கடலில் விழும்படி இதன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.​ இது கடலில் விழுந்தபோது அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றும் அளவிடப்பட்டது.​ ​ராணுவத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவு ​(எஸ்எப்சி),​​ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ​(டிஆர்டிஓ)​ ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த செயல்பாட்டை ஆராய்ந்தனர்.​ ஏவுகணை கிளம்பும்போது எழுந்த வெப்பம் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளும் துல்லியமாக அளவிடப்பட்டன.​ ​கடந்த ஆண்டு மே 19-ம் தேதியும்,​​ நவம்பர் 23-ம் தேதியும் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.அக்னி வடிவமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை.​ இதிலிருந்த பாகங்கள் தவறாக செயல்பட்டதால் முந்தைய சோதனைகள் தோல்வியில் முடிந்தன என்று டிஆர்டிஓ தலைமைக் கட்டுப்பாட்டாளர் டபிள்யூ.​ செல்வமூர்த்தி தெரிவித்தார். அடுத்த கட்டமாக 5,000 கி.மீ.​ தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடிவமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.​ 
 
                    ஓராண்டில் இது தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.​ ​ஏ.கே.​ அந்தோனி பாராட்டு:​​ அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததற்காக இதை வடிவமைத்த குழுவினருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.​ அந்தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனையின்போடு வீலர்ஸ் தீவில் டிஆர்டிஓ தலைவர் சரஸ்வத்,​​ அக்னி-2 ஏவுகணை திட்ட இயக்குநர் அவினாஷ் இருந்தனர்.​ ​அக்னி ஏவுகணை வரிசையில் இடம்பெற்றுள்ள மூன்று ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவும் திறனை ராணுவ உத்திகள் வகுக்கும் பிரிவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior