நடுவீரப்பட்டு:
குமளங்குளம் ஊராட்சியில் சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் உள்ள சின்டெக் டேங்க் மோட்டார் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். நடுவீரப்பட்டு அருகே உள்ள குமளங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் ஒன்றிய பொது நிதியிலிருந்து நடுவீரப்பட்டு - பத்திரக்கோட்டை மெயின் ரோட்டில் இரண்டு, ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஒன்று, அதே தெருவில் மற்றொன்று என நான்கு சின்டெக் டேங்க்குகள் வைத்து ஆஞ்சநேயர் கோவில் அருகில் போர் போட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த மோட்டார் கடந்த ஐந்து மாதங்களாக பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தற்போதுள்ள கடும் மின் வெட்டால் விவசாய மோட்டார் எப்போது இறைக்கும் என பொதுமக்கள் வெயிலில் காலி குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் பிடிக்க அல்லாடி வருகின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின் மோட்டாரை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக