கடலூர் :
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் காணாமல் போன, 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டாப்- அப்' கார்டுகள் குறித்த விசாரணை, விஜிலென்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப்புள்ள 70 ஆயிரம், 'டாப்-அப்' கார்டுகள் விற்பனைக்கு வந்தன. அப்போது பொறுப்பில் இருந்த பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டுள்ளார். தற்போது நடந்த அலுவலக தணிக்கையின் போது, 10 ஆயிரம், 'டாப்-அப்' கார்டுகள் கொண்ட ஒரு பெட்டி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயமான கார்டுகள் மதிப்பு, 5.50 லட்ச ரூபாய். இது குறித்து முதன்மை கணக்கு அதிகாரி ராஜா, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் பி.எஸ்.என்.எல்.,அலுவலகத்திற்குள்ளே நடந்துள்ளதால் துறை ரீதியான விசாரணை நடத்தி சந்தேக நபரை தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என கூறி அனுப்பி விட்டனர்.
இது தொடர்பாக நடந்த ஆலோசனையின் பேரில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கென தனியாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜிலென்சில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இச்சம்பவம் குறித்து கடலூரில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரி மகேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக