உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

எம்.பி.பி.எஸ்.​ சேர முதல் நாளிலேயே 6,249 பேர் விருப்பம்


எம்.பி.பி.எஸ். ​ படிப்பில் சேர சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை விண்ணப்பம் பெறும் மாணவி.​ சென்னை,​​ செங்கல்பட்டு,​​ விழுப்புரம்,​​ வேலூர் உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடர்ந்து மே 31-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
 
 
           எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் சேர முதல் நாளிலேயே 6,249 மாணவ-மாணவியர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.​ ​ கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் சேர முதல் நாளில் 5,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதை ஒப்பிடும்போது,​​ மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் காண்பிக்கும் ஆர்வம் வெளிப்படுகிறது.​ சென்னை,​​ செங்கல்பட்டு,​​ விழுப்புரம்,​​ திருச்சி,​​ தஞ்சாவூர்,​​ திருவாரூர் என 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.​ ​ 
 
                  சென்னை பாரிமுனையில் உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்.​ ​படிப்பில் சேரவும் இதே விண்ணப்பத்தைத்தான் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.​ அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.​ ​ எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் சேர மாணவர்கள் பெரிதும் விரும்பும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டும் முதல் நாளான திங்கள்கிழமை 467 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.​ ​ 
 
               விண்ணப்பக் கட்டணம் ரூ.500-ஐ,​​ கடந்த ஆண்டுகளைப் போன்றே 'செயலர்,​​ ​ தேர்வுக் குழு,​​ கீழ்ப்பாக்கம்,​​ சென்னை-10' என்ற பெயருக்கு டி.டி.​ எடுத்துத்தான் பெற வேண்டும்.​ பணமாகச் செலுத்தினால் விண்ணப்பம் அளிக்கப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார். சனி, ​​ ஞாயிறும் உண்டு:​ அனைத்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை,​​ ஞாயிற்றுக்கிழமை உள்பட எல்லா நாள்களிலும் எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை பெறலாம்.​ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழுச் செயலகத்துக்கு மே 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior