கடலூர்:
கலெக்டர் துவக்கி வைத்த கடலூர் - பண்ருட்டி சாலை பணி இது வரை துவங்கப்படாததால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டி நீண்ட நாட்களாக மூடாமல் கிடந்த சாலைகளில் முக்கிய இடத்தை வகிப்பது கடலூர் - பண்ருட்டி சாலை. கடந்த பருவ மழையின் போது கடுமையான போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதும் இந்த சாலைதான். இந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள் எல்லாம் சேற்றில் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து கம்யூ., கட் சிகள் பல்வேறு போராட் டங்களை நடத்தின. சாலையை சீரமைக்கக் கோரி சேற்றிலேயே உருண்டு ஜனநாயக வாலிபர் சங்கம் போராடியது. இதனால் இந்த சாலை யில் தற்காலிகமாக மணல் கொட்டி போக்குவரத்தை ஏற்படுத்தினர். மழை ஓய்ந்து கோடைகாலம் துவங்கியவுடன் ஏற்கனவே சாலைகளில் கொட்டப்பட்ட மண் மேடுகள் உலர்ந்து புழுதியாக பறக்க துவங்கின. செம்மண்டலம் பகுதி முழுவதும் புழுதி நகரமாக காட்சியளித்தன. உள்ளூர் வாகனங்கள் செம்மண்டலம் பக்கமாக செல்லாமல் மாற்றுப்பாதையை தேடின. இந்நிலையை கருத்தில் கொண்டு கலெக்டர் கடலூர் - பண்ருட்டி சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பூமி பூஜை போட்டு சாலைப் பணியை துவக்கி வைத்தார். துவக்க விழா நடந்து 2 மாதத் திற்குமேல் ஆகிவிட்டது. ஆனால் அவர் துவக்கி வைத்த அன்று நடந்த பணிகளோடு நின்று விட் டது. கலெக்டர் துவக்கி வைத்த சாலைக்கே இந்த நிலை என்றால் மற்ற சாலை பணிகளை எப்போது முடிப்பார்கள் என்பது நகராட்சிக்கே வெளிச்சம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக