நடுவீரப்பட்டு :
பத்திரக்கோட்டை-பாலூர் சாலை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப் பில் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை-பாலூர் கெடிலம் பாலம் வரை உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மிகவும் படும் மோசமாக சாலை இருந்து வந்தது. இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் பல போராட்டங்கள் நடத்தினர். அதனடிப்படையில் பத்திரக்கோட்டையிலிருந்து நடுவீரப்பட்டு நைனாப் பேட்டை வரை உள்ள தார்சாலையை சி.ஆர்.ஐ.டி.பி.,திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பிலும், நடுவீரப்பட்டு நைனாப்பேட்டையிலிருந்து பாலூர் கெடிலம் ஆறு வரை உள்ள தார் சாலை 12 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 30 லட்சம் மதிப்பில் சரி செய்யப்பட உள்ளது. இதில் நரியன்குப்பம் பகுதியில் 320 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் ரோடு போடுவதற்காக சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த ரோடு போடும் பணி வரும் மே மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக