திட்டக்குடி :
தழைச்சத்து உரப்பயிர் விதைகள் வேளாண்துறை மூலம் குறைந்த விலை யில் வழங்கிட கலெக் டரிடம் முறையிடப்பட்டது.
இது குறித்து வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் திட்டக்குடி வேணு கோபால், கலெக்டரிடம் நேரில் முறையிட்டுள்ளதாவது:
விவசாய பணிகளுக்கு ரசாயன உரங்களை பயன் படுத்துவதால் மண் மலட்டுத் தன்மை ஏற்படு கிறது. உரங்களை குறைக்க இயற்கை முறை யில் தழைச்சத்தினை ஏற்படுத்தும் தழை உரப்பயிரான "தக்கை சனப்பை பூண்டு' விதைகள் பயன்பட்டது. இதன் மூலம் மண்ணில் இயற்கையான தழைச் சத்தும், தேவையான ஊட்டமும், மண் வளமும் அதிகரிக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ 24 முதல் 26 ரூபாய் வரை விற்கப்பட்ட இவ்விதைகள், தற்போது இரு மடங்கு விலையேற்றம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவு பாதிக்கின்றனர். எனவே வேளாண் துறை மூலம் குறைந்த விலையில் தழைச்சத்து உர விதைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து வேளாண் அதிகாரிகளுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக