திட்டக்குடி :
பெண்ணாடத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் அதனால் அதிகளவில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி தாலுகாவின் குறுவட்டமாகவும், விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையின் மையத் திலும் பெண்ணாடம் உள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் அரசு மெட்ரிக் மேல்நிலைப்பள் ளிகள், வங்கிகள், புகழ் பெற்ற பழமையான கோவில்கள் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பெண்ணாடத்தை மையமாக கொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் மெட்ராஸ் சிமென்ட்ஸ், தளவாய் இந் தியா சிமென்ட்ஸ், இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலைகளுக்கு மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட் களை ஏற்றி செல்லும் லோடு லாரிகள், கரும்பு டிராக்டர்கள், டயர் வண்டிகள், கண்டெய்னர் லாரிகள் என அதிகளவு கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இறையூர் "ரயில்வே கிராசிங்' வழியாக திட்டக்குடி, மங்களூர், தொழுதூர், ஆவினங்குடி பகுதிகளிலிருந்து விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். அதுமட்டுமின்றி சர்க் கரை ஆலைக்கு வரும் டிராக்டர்கள், டயர் வண்டிகள் தண் டவாளத்தை கடக்க முடியாமல் திணறுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுவதும் இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.
தற்போது விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ் சாலை தொடர் மழையால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கரும்பு அறுவடை காலங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு வரும் டிராக்டர்கள் இறையூர் ரயில்வே கிராசிங் முதல் பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுவதுடன் அவ்வப் போது விபத்துக்கள் நடக் கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இறையூர் அடுத்த தொளார் கை காட்டி சாலைக்கு முன்னதாக புறவழிச்சாலை அமைத்து, பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் மறுமுனை இணைக்க வேண்டும். ஆலைகளுக்கு சென்று வரும் வாகனங்கள் சுலபமாக புறவழிச்சாலைக்குள் நுழைந்து நகருக்கு வெளியே செல்ல தனி சாலையும் அமைக்க வேண்டும். தற்போது விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையை சீரமைக்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கி புறவழிச் சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக