சிதம்பரம் :
மணிலா பயிரில் நல்ல மகசூல் பெற 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம் உரம் விற்பனை செய்யப்படுவதாக வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டங்களில் விவசாயிகள் நலனுக்காக ஜிப்சம் 50 சதவீத மானிய விலையில் கீரப்பாளையம் நந்தீஸ்வரம் வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணை வித்து பயிருக்கு எக்டேருக்கு 200 கிலோவும், பயறு வகைகளுக்கு 110 கிலோவும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மணிலாவுக்கு இடுவதால் மணிலாவில் விழுதுகள் நன்கு உருவாகவும், காய்கள் திரட்சியாகவும் இருக்கும். எனவே மணிலாவில் ஜிப்சம் போட்டு அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக