உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

தெற்கு பிச்சாவரம் - கொடியம்பாளையம் இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்கும் பணி துரிதம்

கிள்ளை :

               சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம்- கொடியம்பாளையம் இணைக் கும் வகையில் வெள்ளாற்றில் 10.5 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

                  நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் சீர்காழியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் கொடியம்பாளையம் மீனவ கிராமம் கடலுக்கும், ஆற்றுப்படுகைக் கும் இடையில் தீவாக உள்ளது. இந்த கிராமத்தில் 420க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 300க்கும் மேற்பட்ட கன்னாத் தோணி, லம்பாடி மற்றும் விசைப் படகுகள் மூலம் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி, ரேஷன் கடை, தபால் நிலையம் உள்ளிட்ட சில முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. கொடியம்பாளையத்திருந்து தெற்கு பிச்சாவரம், திருவாசலடி வழியாக சிதம்பரத்திற்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி தார் சாலையாக்குவதுடன், வெள்ளாற்றில் பாலம்  கட்டித்தரவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.  கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்கியதை தொடர்ந்து அப்பகுதியை பார்வையிட சென்ற அதிகாரிகளை அப்பகுதி மக்கள் சூழ்ந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆசியன் வளர்ச்சி வங்கி உதவியுடன் சுனாமி நிதி(2008-2009) 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மண் பரிசோதனை செய்து பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆற்றின் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் 8.5 மீ., அகலத்தில் 160 மீ., நீளத்திற்கு 7 ஸ்பேன் (தூண்கள்)  கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து  கிழக்கே கடற்கரையோரம் 406 மீட்டர், பிச்சாவரம் சாலையில் 200 மீ., தொலைவில்  7.5 மீ., உயரத்தில் கான்கிரீட் பிளாக்கில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையை உயர்த்தி, தார் சாலை அமைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஏப்ரல் முதல் வாரத்தில் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior