உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

பண்ருட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் மாட்டு தொழுவமாகிறது

பண்ருட்டி : 

           பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியே கிடப்பதால் மாட்டு தொழுவமாக மாறி வருகிறது.
 
                பண்ருட்டி  நகர வி.ஏ.ஓ. அலுவலகம்  களத்துமேடு பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய வி.ஏ.ஓ., கோவிந்தசாமி கடந்த மார்ச் மாதம் எல்.என்.புரத்திற்கு மாற்றப்பட்டார். விழமங்கலம் வி.ஏ.ஓ., சையத் இப்ராகீம் பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., வாக கூடுதல்  பொறுப்பை கவனித்து வருகிறார். களத்துமேடு பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில்  அருகில் உள்ள திடீர்குப்பத்தில் சாராயம் குடித்துவிட்டு வருபவர்கள் அடிக்கடி  குடிபோதையில் நின்று தகராறு செய்வதும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் அலுவலக வாயில் முன் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். மழைக்காலங்களில் கட்டடத்தில் மழைக்கசிவு ஏற்பட்டதால்   கடந்த 4மாதங்களாக வி.ஏ.ஓ.சையத் இப்ராகீம் விழமங்கலத்தில் உள்ள அலுவலகத்திலேயே  பணியை தொடர்கிறார். இதனால் களத்துமேடு  அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அருகில் உள்ளவர்கள் அலுவலகம் முன் மாட்டுதொழுவமாக வைக்கோல் போர் வைத்து மாடு கட்ட துவங்கிவிட்டனர். ஆனால் பொதுமக்கள் பலர் வி.ஏ.ஓ.,அலுவலகம் பூட்டி கிடப்பதை பார்த்துவிட்டு நீண்ட அலைகழிப்புக்கு  பின் விழமங்கலம் சென்று சான்றிதழ் பெற வேண்டியுள்ளது.  நகரத்திற்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.  இதனால் பொதுமக்கள் தான் பெரும் அலைகழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  பண்ருட்டி நகரத்திற்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்கவும், களத்துமேடு பகுதியில் வி.ஏ.ஓ.,அலுவலகம் தொடர்ந்து செயல்பட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior