நெய்வேலி :
இருப்பு கிராமத்தில் நடந்த நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.
நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாம் இருப்பு கிராமத்தில் கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்தது. முகாமில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம், சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம், வரதட்சணை, குடி, புகை மற்றும் பழைய கலைகளின் அழிவுகள் பற்றிய குறும்படங்கள், நுகர் வோர் விழிப்புணர்வு முகாம், இயற்கை பேரழிவு குறித்த கருத்தரங்கம், பல்மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், வளர் இளம் பருவ கருத்தரங்கம் நடத்தப்பட்டன. நிறைவு விழாவிற்கு மணி தலைமை தாங்கினார். கிராம தலைவர் பத்மாமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் கிப்ட் கிறிஸ்டோபர், தன்ராஜ் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் மருதூர் அரங்கராசன் வாழ்த்துரை வழங் கினார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு என். எல்.சி., துணைப் பொது மேலாளர் குப்புராஜ் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக